Jul 31, 2015

வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாள் இணைந்து வாழ்வதற்கு பேஸ்புக் உதவுவுகிறது - ஆய்வில் தகவல்

பேஸ்புக்கில் அதிக நேரம் கழிப்பதால் மற்றவர்களுடனான தொடர்புகள் குறைந்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாள் இணைந்து வாழ்வதற்கு பேஸ்புக் உதவுவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மேடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் கேத்தலினா டோமா, ஜோடியாக இணைந்து வாழ்பவர்களின் பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தபோது ஒரு சுவாரசியாமான விஷயம் வெளிவந்துள்ளது.

அதில் பேஸ்புக் வழியாக செய்திகளை பரிமாறிக்கொள்வது, தகவல் அனுப்பிக்கொள்வது, கடிதம் எழுதிக்கொள்வது போன்ற செயல்கள் மூலம் அதிக நேரம் இணைந்திருக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதாக தெரியவந்துள்ளது.

Related Posts

வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாள் இணைந்து வாழ்வதற்கு பேஸ்புக் உதவுவுகிறது - ஆய்வில் தகவல்
4/ 5
Oleh