Feb 1, 2012

அல்ட்ரா சவுண்ட் கருத்தடை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


உடலின் உள் உறுப்புகளை படம் பிடிப்பதற்கு அல்ட்ரா சவுண்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதன் மூலமாக கருத்தடை செய்யலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது கருத்தடைக்கு பல்வேறு முறைகள் இருந்தாலும் அவற்றில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன, வேறு சிலவற்றால் போதிய பலன்கள் கிடைப்பதில்லை. எனவே கருத்தடை முறைகள் இன்னும் முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடித்துள்ள அல்ட்ரா சவுண்ட் கருத்தடை முறை முழுமையான வெற்றி அடையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
   

அல்ட்ரா சவுண்ட் அலைகளை உயிரணுப்பையில் தாக்க செய்து அதை செயலிழக்க செய்வது தான் இந்த புதிய முறை கருத்தடையாகும். இந்த முறை மூலம் உயிரணுவின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிடுவதால் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு முற்றிலும் நின்றுவிடும். இன்னும் பல்வேறு ஆய்வுகளை நடத்தி இதனை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறையில் சில சிக்கல்கள் குறித்து ஷெப்பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலன்பேசி கூறுகையில், இந்த புதிய நடைமுறை மூலம் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. ஒருவேளை மீதி இருக்கும் உயிரணுக்களின் மூலம் பெண்கள் கர்ப்பமாகி விட்டால் அந்த குழந்தை ஊனமாக பிறக்க வாய்ப்பாகிவிடும். எனவே இதில் கடுமையான சோதனைகளை நடத்திய பிறகே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்றார். 



Related Posts

அல்ட்ரா சவுண்ட் கருத்தடை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
4/ 5
Oleh