Sep 11, 2011

நிலவுக்கு கிளம்பின நாஸாவின் செயற்கைக்கோள்கள்


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நிலவுக்கான விண்வெளிக் கலம் இரண்டு நாள் தாமதத்துக்குப் பின் (10 செப்டம்பர், 2011 ) நேற்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

புளோரிடாவின் கேப் கனவ்ரெல் என்ற இடத்திலிருந்து கிளம்பிய டெல்டா டூ என்ற ரொக்கெட், ஒரே மாதிரியான இரண்டு செயற்கைக் கோள்களைச் சுமந்து செல்கிறது.

இவை நிலவின் ஈர்ப்பு வெளியை இதற்கு முன்பில்லாத வகையில் ஆழமாக ஆராயும்.

கிராவிட்டி ரெகவரி அண்ட் இண்டீரியர் லெபாரெட்டரி சுருக்கமாக கிரெய்ல் என்று சொல்லப்படும் இந்த நிலவுப் பயணம் நிலாவின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களைக் கண்டறியும் என்று தாங்கள் நம்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவு எப்படி உருவானது, நிலவில் பூமியைப் பார்த்தபடி இருக்கும் பக்கம் வழவழப்பாகத் உள்ள அதேநேரத்தில் பூமியின் பார்வையில் இருந்து மறைந்திருக்கும் மற்ற பக்கம் மிகவும் கரடுமுரடாக இருப்பது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை காண இந்தப் பயணம் உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.




Related Posts

நிலவுக்கு கிளம்பின நாஸாவின் செயற்கைக்கோள்கள்
4/ 5
Oleh