Sep 3, 2011

பிரபலங்களின் மனதை மாற்ற உதவும் இணையதளம்


நியோமா இணையதளம் இணைய உலகில் எந்த அளவுக்கு செல்வாக்கு பெறும் என்று தெரியவில்லை.ஆனால் இந்த தளம் முன்னணி தளமாக உருவாகுமானால் உலகில் அழகான மாற்றங்கள் நிகழ வாய்ப்பு ஏற்படும் என்று நம்பலாம்.
அப்போது தேசத்தலைவர்களின் தவறான கொள்கை முடிவுகளை நினைத்து வருந்த வேன்டியிருக்காது.காரணம் அந்த முடிவுக‌ளை இணையவாசிகள் நினைதால் மாற்றிவிடலாம்.அதாவது மாற்றி கொள்ள வைக்கலாம்.அதே போல கட்சி தலைவரின் முடிவில் மாற்றம் தேவை என்று தொண்டர்கள் நினைத்தாலும் அவரது மனதை மாற்றலாம்.

அபிமான நட்சத்திரங்கள் சரியான பாத்திரங்களை தேர்வு செய்ய வைக்கலாம்,கிரிக்கெட் அணியின் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை திருத்தலாம்.நடசத்திர இயக்குனர் எந்த மாதிரியான படங்களை இயக்க வேண்டும் என்று நிர்பந்திக்கலாம்.

இன்னும் என்னென்னவோ அற்புதங்கள் சாத்தியமாகலாம்.

ஆனால் அதற்கெல்லாம் நியோமா செல்வாக்கு பெற வேண்டும்.
நியோமாவால் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை இணையவாசிகளுக்கு ஏற்பட வேண்டும்.

நியோமா அப்படி என்ன செய்கிறது? செல்வாக்கு மிக்கவர்கள் மீது சாமான்யர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழியை இந்த தளம் உண்டாக்கி தருகிறது.

அதாவது சமுகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் ,அவர்கள் நாடாள்பவராக இருந்தாலும் சரி,நட்சத்திரமாக இருந்தாலும் சரி ,அவர்கள் நிலைப்பாட்டில் மாற்றம் தேவை என்று நினைத்தால் நியோமா முலமாக் இணையவாசிகள் கூட்டாக அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் சாமன்யர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பார்களா என்ற சந்தேகம் ஏற்படலாம்.இணையவாசிகள் கூட்டாக சேர்ந்து இதனை சாதிக்கலாம் என்கிறது நியோமா.

யாருடைய நிலைபாட்டில் மாற்றம் தேவையோ அவர்களோடு நியோமா மூலமாக தொடர்பு கொண்டு உரையாடலாம். என்றும் அழைபு விடுக்கிறது.

இதற்கு முதலில் செய்ய வேண்டியது பிரபலங்களுக்கு சொல்ல விரும்பும் செய்தியை நியோமாவில் பதிவு செய்து அந்த கருத்திற்கு வலு சேர்க்க நண்பர்களின் ஆதரவை திர‌ட்டலாம்.பேஸ்புக் மூலம் கோரிக்கை விடுக்கலாம்.கனிடமான எண்ணிக்கையில் ஆதரவு குவிந்த பிறகு நியோமா அந்த செய்தியை சம்ப‌ந்தப்பட்ட பிரமுகருக்கு அனுப்பி வைக்கும்.அவர் அதனை படித்து தனது விளக்கத்தை தெரிவிப்பார்.முடிவையும் மாற்றி கொள்ளலாம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவில் துவங்கி,ஹாலிவுட் நட்சத்திரம் பாப் பாடகர் ,பொருளாதார நிபுணர் என யாருடைய நிலைப்பாட்டை மாற்ற விரும்பினாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

நிபுணர்களும் ,வல்லுனர்களும் தான் பெரிய மனிதர்களுக்கு ஆலோசனை கூற வேண்டுமா என்ன? நீங்கள் நினைத்தாலும் நண்பர்களோடு இணைந்து பிரபலங்களின் மனதை மாற்ற முயற்சிக்கலாம்.

கொஞ்சம் லட்சிய நோக்கிலான தளம் தான்.நடைமுறையில் பலன் தருமா என்பது தெரியவிலை.ஆனால் இதன் அடிப்படை கருத்து வலுவானது.சமுக வலைப்பின்னல் சேவை தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் நண்பர்களோடு சேர்ந்து தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ஆற்றலை மாற்றத்தை உருவாக்க பயன்படுத்தி கொள்ள இந்த தளம் தூண்டுகிறது.

முக்கிய பிரச்ச‌னைகளில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் கொண்டுவரக்கூட நம் கருத்தை நண்பர்க‌ளோடு சேர்ந்து உரக்க ஒலிக்க செய்யலாம்.

ஒருவிதத்தில் பார்த்தால் இணையம் மூலம் கையெழுத்து வேட்டை நடத்தும் சேவையின் அடுத்த கட்டமாக இதனை கருதலாம்.பிரபலங்களுக்கு சொல்ல விரும்பும் செய்தியை நண்பர்களோடு கூட்டாக இந்த தளம் வாயிலாக சொல்லிவிடலாம்.

எந்த வீரருக்கு பதிலாக யாரை சேரக்காலம் என்று கிரிக்கெட் போட்டியின் போது கேப்டன் டோனிக்கு அறிவுரை சொல்லலாம்.எழுத்தாளரின் அடுத்த படைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

இந்த தளத்திற்கு என்று மிகப்பெரிய பயனாளிகள் பரப்பு ஏற்படுமானால் பிரபலங்களும் இதில் சொல்லியிருக்கும் யோசனைகளை ஆர்வத்தோடு கேட்கலாம்.

இணையதள முகவரி
Related Posts

பிரபலங்களின் மனதை மாற்ற உதவும் இணையதளம்
4/ 5
Oleh