Sep 11, 2011

பதிவிறக்க சுட்டிகளை மட்டும் தேட உதவும் தேடுபொறிகள்


இணையத்தில் தேடு பொறி என்பது மிகவும் அவசியமான ஒன்று. இதன் மூலம் நாம் இணையத்தில் குவிந்து இருக்கும் தகவல்களை மிகவும் எளிதாக தேடலாம். இணைய உலகில் சாதனை படைத்து கொண்டிருக்கும் கூகிள் புகழ் பெற முக்கியமான காரணம் அதன் தேடுபொறி தான் இது அனைவரும் அறிந்ததே. நாம் இதில் பல வகையான தளங்களை தேடலாம் ஆனால் ஒரு கோப்புடைய பதிவிறக்கம் சுட்டியினை தேடுவது சற்றே சிரமமானது. நாம் ஒரு கோப்பின் பதிவிறக்க சுட்டியினை மட்டும் தேட சில இணையதளங்கள் நமக்கு வழிவகுக்கிறது


1.FILES TUBE :

இந்த தளம் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். கூகுளில் சொடுக்கினால் கூட இந்த தளம் தான் முதலில் வரும். இந்த தளம் மூலம் நாம் குறிப்பிட்ட வகையான கோப்புகளை மட்டும் தேடலாம் ( AVI, MKV, MP3, MP4 ). இந்த தளமானது வீடியோ , மென்பொருள்கள் ஆகியவற்றை தேடுவதில் மிகவும் சிறந்தது. இதற்க்கு அந்த தளத்தில் மேலே இருக்கும் இணைப்பை சொடுக்குங்கள்.



2.FILE CROP :

இந்த தளம் பற்றி பலரும் அறிந்திருப்பர். இந்த தளம் மூலம் நாம் கோப்புகளை மிக எளிதாக தேடலாம். மேலும் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை கொடுத்தும் தேடலாம் அது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்டில் உள்ள தளங்களில்  உள்ள கோப்புகளை மட்டும் தேடலாம் . இதில் கீழே இருக்கும் சொற்பெட்டியில் கோப்பின் அளவை கொடுக்கலாம் உதாரணத்திற்கு 20KB -100MB என்று கொடுத்தால் இந்த அளவு உள்ள கோப்புகள் மட்டும் பட்டியலிடப்படும்.


3. SEARCH SHARED :

மேலே உள்ள தளங்களில் நாம் குறிப்பிட்ட ஒரு சேமிப்பு தளங்களில் இருந்து மட்டும் தான் கோப்புகளை தேட இயலும். ஆனால் இந்த தளத்தில் நாம் நமக்கு வேண்டிய சேமிப்பு தளங்களில் இருந்து முடிவுகளை பெறலாம். இந்த தளத்தில் சேமிப்பு தளங்களின் ஒரு பட்டியலே இருக்கிறது அதில் நமக்கு வேண்டியவைகளை தேர்வு செய்து விட்டு அந்த தளங்களில் இருந்து மட்டும்  நாம் முடிவுகளை பெறலாம்.


4. JET DL  :

இந்த தளத்திலும் நாம் குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் மட்டும் தேடலாம். மேலும் இதில் முக்கியமான வசதி என்னவென்றால் இந்த தளத்தில் நாம் கோப்பின் அளவை வைத்து கோப்புகளை தேடலாம்.


5. SHARE DIGGER :

இந்த தளத்தில் நாம் நமக்கு தேவையான கோப்புகளை குறிப்பிட்ட சேமிப்பு தளத்தில் இருந்து மட்டும் தேடலாம். இந்த தளமானது கூகுளை பயன்படுத்தி தேடுகிறது.






Related Posts

பதிவிறக்க சுட்டிகளை மட்டும் தேட உதவும் தேடுபொறிகள்
4/ 5
Oleh