Jun 16, 2011

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்?

புவி வெப்பமயமாதலின் விளைவாக இன்னும் 40 வருடங்களில் ஆர்டிக் போக்குவரத்துக் கட்டமைப்புகள் இரு பக்கக் கூரான கத்தியைப் போன்று மாறி, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையும் என அண்மைய ஆய்வுகள் முன்கணிப்பு செய்துள்ளன.

‘தொடர்ச்சியாக கடல் பனிக்கட்டிகள் உருகுவதன் காரணத்தினால் கடல் மார்க்கமான பரிமாற்றுத்திறன் அதிகரிக்கும். ஆனால், வெப்பமான காலநிலையைப் பொறுத்து தரைவழி மூலமான முக்கிய போக்குவரத்துக் கட்டமைப்புகள் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள், கடலோர வள-பிரித்தெடுப்பு செயற்பாடுகள், சுற்றுலாத்துறை, மீன்பிடித் தொழில், கப்பல் சமாச்சாரங்கள் என்பவற்றிற்கு இந்நிலை சாதகமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, உள்நாட்டு சுரங்கத் தொழில்கள் மற்றும் மரம்வெட்டும் செயற்பாடுகள், உள்நாட்டு எண்ணெய் மற்றும் வாயு சேகரிப்பு செயற்பாடுகள் போன்றவற்றில் சாதகமற்ற சூழ்நிலையை தோற்றுவிக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘காலநிலை வெப்பமடைதல் காரணமாக ஆர்டிக் உருகிப் பெருகும் என்ற பொதுவான கருத்து தான் நிலவுகிறது, ஆனால் இறுதியாக வெளியிடப்பட்ட ஆய்வுகளின் படி ஆர்டிக்கின் ஒரு பகுதி மாத்திரம் தான் அவ்வாறு நிகழும் எனவும் கப்பல் மூலமான போக்குவரத்து அதிகரிப்பு தரைவழி வாகனப் போக்குவரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தும்’ எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

2050ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலையான 3.6 முதல் 6.2 டிகிரி பாரன்கீட் வெப்பநிலையானது குறிப்பாக குளிர்காலத்தில் 7.2 முதல் 10.8 டிகிரி பாரன்கீட்டாக அதிகரிக்கும்.

இந்நிலையில், உலகின் வேறெந்தப் பகுதிகளையும் விட ஆர்டிக் மீதான தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளின் படி தற்காலிகப் பனிப் பாதைகள் இதன் காரணமாகப் பாதிப்படையும் எனத் தெரியவருகிறது.

இதன் விளைவாக குளிர்கால தரைப் பாதை போக்குவரத்து வசதிகளைக் கொண்டுள்ள ஆர்டிக்கின் எல்லையோரங்களில் அமைந்துள்ள கனடா, பின்லாந்து, கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, ரஷ்யா, ஸ்வீடன் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற 8 நாடுகளும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும்.

இந்த போக்குவரத்து பாதிப்புகள் 11 முதல் 82 வீதமாக அமையக்கூடும் என புவியியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக கனடாவும் ரஷ்யாவும் அதிகளவிலான குளிர்காலப் பாதைப் பயன்பாடுகளில் சிக்கல்களை எதிர்கொள்ளும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான தாக்கங்கள் காரணமாக பரிசல்கள் (Ferry) மூலமான போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

ஆய்வுகளில் கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தின்படி வடமேற்கு எல்லைப்புற தலைநகரான யெல்லோநைப்பிலிருந்து கனடாவின் பாத்ரஸ்ட் இன்டெல்லுக்கான பயண நாட்கள் 3.8 இலிருந்து 6.5 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘குளிர்காலப் பாதைகளைச் சார்ந்திருக்கும் தூரப்பிரதேச மக்கள் விநியோகக் கட்டணங்களை அதிகமாகக் கொண்டுள்ள விமான கார்கோ (சரக்கு விமானம்) சேவைகளை எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். இது அந்த மக்களின் வாழ்வை கடினமானதாக்கும்’ என ஸ்டீபன்சன் குறிப்பிட்டுள்ளார்.

கிறீன்லாந்து, கனடா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகள் தம்முடைய முக்கியமான பொருளாதார வலயங்களுக்கான அதிகரித்த போக்குவரத்து வசதிகளைப் பெற்று மீனபிடி வளங்களையும் அதிகமாகப் பெற்றுக்கொள்ளும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 


Related Posts

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்?
4/ 5
Oleh