Jun 16, 2011

கின்னஸ் சாதனை படைத்துள்ள உலகின் மிகக் குள்ளமான மனிதன்!


உலகின் மிகக் குள்ளமான மனிதன் என்ற கின்னஸ் சாதனையிற்கு உரியவர் பிலிப்பைன்ஸின் ஜன்ரி பாலாவிங்.  இவர் 23.6 அங்குல உயரம் மற்றும் 5 கிலோகிராம்கள் எடையுடையவர்.
கடலோரக் கிராமமான சின்டங்கனில் இவர் தன்னுடைய 3 இளைய சகோதரங்களுடனும் பெற்றோருடனும் வாழ்ந்து வருகின்றார்.



13 வயதான தன்னுடைய சகோதரி ஜெய்சல் மற்றும் 6 வயதான ஜன்ரிச், 11 வயதான ஜே-ஆர்ட் ஆகியோர் பாடசாலைக்கு செல்லும் நிலையில் ஜன்ரி தன்னுடைய தாயான கொன்சப்ஷனுடன் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். 35 வயதான கொன்சப்ஷன், ‘ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடத்திலும் இவனுக்கு என்னுடைய பராமரிப்பு தேவை. ஜன்ரியால் நடக்க மட்டுமே முடியும். நீண்ட நேரம் இவனால் நிற்க முடியாது’ என்றார். 



பிறந்தபோது ஜன்ரி வெறும் 1 லிட்டர் கோக் போத்தல் அளவில் தான் இருந்தார். ஜன்ரிக்கு 4 வயதாகும் பொழுதுதான் அவருடைய வளர்ச்சி குறித்து அவரது தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்தக் குடும்பம் ஆலோசனைகனைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை ஜன்ரிக்கு வழங்கியபோதும் பெரிய வித்தியாசம் எதுவும் ஏற்படவில்லை.
இவரது பெற்றோரின் கருத்துப்படி ஜன்ரி பிறப்பதற்கு முன்னர் அவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்துள்ளது. இவர் பிறந்த பின்னர் தான் இவரது தந்தையான ரெனால்டோ (வயது 37) விற்கு வேலை கிடைத்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. ஜன்ரி எங்களுடைய அதிர்ஷ்டக் குழந்தை என ரெனால்டோ தெரிவிக்கின்றார்.




பிலிப்பைன்ஸின் சுதந்திர தினத்தில் இவர் பிறந்ததால் இவருடைய கிராமத்தில் இரண்டு கொண்டாட்டங்கள் இவரது பிறந்த தினத்தில் நடக்கின்றன.
இவருடைய விருப்ப உணவு பன்றி இறைச்சியாகும். மிகக்குறைந்த சோற்றுடன் இரண்டு விரல்கள் அளவு உணவை மாத்திரமே இவரால் உட்கொள்ள முடியும்.




இவர் பிறந்த ஜூன் மாதத்தையும் இவரது தந்தையின் பெயரான ரெனால்டோ (ஸ்பெயின் மொழியில் சிறிய அரசன் எனும் பொருள்) என்பதையும் இணைத்து இவருக்கு ஜன்ரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.




இவரது வீட்டில் இவருக்கென்று தனியாக ஒரு படுக்கையறை இல்லை. தன்னுடைய பெற்றோருடன் தான் இவர் படுத்துறங்குகிறார்.



Related Posts

கின்னஸ் சாதனை படைத்துள்ள உலகின் மிகக் குள்ளமான மனிதன்!
4/ 5
Oleh