Jun 18, 2011

நாம் நடக்கும் வேகம் எவ்வளவு?


நன்றாக ஓடும் ஒருவரால் சுமார் 3 நிமிடம் 50 வினாடி நேரத்தில் 1.5 கிலோமீட்டர் தொலைவு ஓட முடியும். 1958-ல் பதிவான உலக சாதனை நேரம், 3 நிமிடம் 36.8 வினாடிகள் ஆகும்.

சாதாரணமாக ஒரு நபர் நடக்கும்போது ஒரு வினாடிக்கு 7 மீட்டர் தூரத்தைக் கடக்கிறார் என்று ஆகிறது. ஆனால், நடக்கும், ஓடும் வேகங்களை அப்படியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனென்றால், நடந்துசெல்லும்போது பல மணி நேரத்துக்கு மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் உங்களால் நடக்க முடியும். ஆனால், ஓடுபவர் ஒரு குறுகிய நேரத்துக்குத்தான் ஒரே வேகத்தில் ஓட முடியும்.

காலாட்படை துரித நடையில் செல்லும்போது அதன் வேகம், ஓடுபவரின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்குதான். அதாவது, வினாடிக்கு 2 மீட்டர் அல்லது மணிக்கு ஏறத்தாழ 7 கிலோமீட்டர்தான். ஆனால் அப்படை வீரர்களால் மிக அதிகத் தொலைவு செல்ல முடியும்.

உங்களின் சாதாரண நடையின் வேகத்தை, மெல்ல ஊர்வதற்குப் பேர் போன நத்தையின் அல்லது ஆமையின் `வேகத்துடன்’ ஒப்பிட்டுப் பார்ப்பது நிச்சயமாய் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

நத்தையின் வேகம் வினாடிக்கு 1.5 மி.மீ. அல்லது மணிக்கு 5.4 மீட்டர். அது, உங்களின் வேகத்தை விடச் சரியாக ஓராயிரம் மடங்கு குறைவானது. மெல்ல நகருவதற்குப் பேர் போன மற்றொரு பிராணியான ஆமையின் வேகமும் அதிகமல்ல, மணிக்கு 70 மீட்டர்தான்!

நத்தை, ஆமை ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் நீங்கள் விரைவாகச் செல்லக்கூடியவர்தான். ஆனால், உங்களுடைய இயக்கத்தை நம்மைச் சுற்றிலும் உள்ள வேறு பல இயக்கங்களுடன் ஒப்பிட்டால் உங்களை மிஞ்சும் பலவற்றைக் காண்பீர்கள். வினாடிக்கு 5 மீட்டர் வேகத்தில் பாயும் ஈட்டியை எட்டிப் பிடிக்க, `ஸ்கீ’ எனப்படும் பனிச்சறுக்குக் காலணிகளை அணிந்துகொண்டால்தான் முடியும். விமானத்தில் சென்றால்தான் கழுகுடன் உங்களால் போட்டியிட முடியும்.

இருப்பினும், மனிதன் கண்டுபிடித்துள்ள வாகனங்கள், வேகத்தில் அவனை எதற்கும் இளைக்காதவனாக ஆக்கிவிட்டன.



Related Posts

நாம் நடக்கும் வேகம் எவ்வளவு?
4/ 5
Oleh