Jun 30, 2011

எதிர்பார்த்திருக்கிறேன்


அன்புநிறைந்தவனே
எனை ஆட்சி செய்தவனே
உன் பிரிவைத் தந்து என்றும்
உன் தவிப்பில் தத்தளிக்க விட்டாயே

நீ வேண்டும் என்னருகில்
உன்மார்மீது சாய வேண்டும்
உன்விரல்கள் தலைகோர வேண்டும்
உன் பாசமுத்தம்
என் நெற்றி தழுவ வேண்டும்

உன்னாலடைந்த சுகங்களை விட
உனக்காக ஏங்கிய நாட்களதிகமடா
ஒவ்வொரு நிமிடமும்
பலதசாப்பதங்களாய் மாறுகிறது
வருவாய் என்றிருக்கிறேன்
வாசல் வழி பார்த்திருக்கிறேன் 




Related Posts

எதிர்பார்த்திருக்கிறேன்
4/ 5
Oleh