May 15, 2011

உங்கள் Password ஐ சோதிக்க !

 இந்த பதிவில் உங்கள் Password ஐ சோதிப்பது எப்படி என்றும் அதை உங்கள் கணினி Brute force attack என்ற முறையில் எவ்வளவு நேரத்தில் உடைத்தறியும் என்பதையும் பார்க்கலாம்.


என்னது என் password ஐ என் கணினி உடைக்குமா? அப்படினா?. என்று கேட்பவர்களுக்கு Brute force attack இந்த விக்கி பக்கத்தை படிக்கவும். ஒரே வாக்கியத்தில் சொல்லனும்னா?. உங்களை அறியாமல் கணினி உங்கள் கடவுசொல்லை திருட வாய்ப்புண்டு.

How secure is my password என்ற இணையதளத்தில் சென்று உங்களது கடவுசொல்லை குறிப்பிட்டால் போதும் அதை எவ்வளவு நேரத்தில் உங்களது கணினி உங்களுக்கு தெரியாமல் அறிந்து கொள்ளும் என கூறிவிடும். இந்த இணையம் சுலபமான சூத்திரத்தை ” ( மொத்த சுலபமான எழுத்துக்கள் ^ கடவுச்சொல்லின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை ) / ஒரு நொடியில் எண்ணிக்கை “ கொண்டு இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது.

இந்த இணையம் இதை உங்கள் கணினியின் Browser லேயே Javascript உபயோகித்து கூறுவதால், உங்கள் கடவுச்சொல் களவு போகும் ஆபாயம் இல்லை.

இவ்வாறு எனது கடவுசொல்லை கண்டறிந்தேன். உங்கள் கடவுச்சொல்லை கணினி அறிய எத்தனை நாட்கள் ஆகும்?

இணைய  முகவரி 

Related Posts

உங்கள் Password ஐ சோதிக்க !
4/ 5
Oleh