Apr 22, 2011

காதலராய் நாமிருவர்...

















 என் இதயத்தில் நீ அமர்ந்து
அவ்வின்பத்தை நான் சுமந்து
பல கவிதைகள் நான் வடிக்க
அவற்றை எல்லாம் நீ படிக்க
இன்பம் கண்டேன் நானடியே

காதலராய் நாமிருக்க
காவியமாய் பலர் புகழ
கனிவாக நாம் வாழ்ந்து
காதலுக்கு புகழ் சேர்க்க
கனாக்கண்டேன் நானடியே
கல்நெஞ்சம் படைத்தவளாய்
காதலையே நீ மறந்து
என் கவிதைகளை மறந்தவளாய்
கடல்கடந்து சென்றாயே நீயடியே
கடல் நீரும் உவர்போல
என் கண்ணீரும் உவரடியே
கடல்நீரில் பலஉயிரினங்கள் வாழ்வதுபோல்
என் கண்ணீரில் நீமட்டும் வாழுகிறாய்
உன் நினைவுகளை நான் சுமந்து
உருவமற்ற கனவுகள் போல்
நீ விரும்பும் கவிதைகளை
பலவிதமாய் நான்வடிப்பேன்
அவற்றை எல்லாம்
நீ   படித்தால்  அக
மகிழ்வேன் நானடியே...



Related Posts

காதலராய் நாமிருவர்...
4/ 5
Oleh