Apr 25, 2011

மரணமில்லாக் காதல்




















எங்கும் காதல்
எதிலும் காதல்
உயிராய் அவதரித்தால்
காதலை சுவாசித்திட வேண்டுமே
காதலில்லா வாழ்வும்
அன்பில்லாக் காதலும்
மனிதனுக்கே உரித்தான
அற்புத உணர்வன்றோ..
மரணமே இல்லாக் காதலை
இழப்பதாக உணர்ந்து
நீ -  மரணித்து விட
காதலை குற்றம் சொல்கிறாய்
யார் விட்டகன்றாலும்
யாவரும் எதிர்த்திட்டாலும்
உன்மனதில் காதல் வாழும்
மீண்டும் உயிர்பெறும்
நிலையற்ற வாழ்கையில்
நிலையான காதலோடு
நிலைப்பதுதான் வாழ்க்கை
இதை மறந்த நீயும்
காதலை வாழ வைக்க
வாழ்வோரை சாவடித்து
காதலை வெற்றி பெற
காதலிக்க நாடுகிறாய்...






Related Posts

மரணமில்லாக் காதல்
4/ 5
Oleh